ரூ.54,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை
Published on
Updated on
1 min read

ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

புதன்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 280 உயர்ந்து ரூ.53,640-க்கும், ஒரு கிராம் ரூ. 6,705-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 6,725-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
உ.பி.யில் ராபர்ட் வதேரா போட்டியா?

வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.88.50-க்கும், ஒரு கிலோ ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com