மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் வெற்றி நடை தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 560 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தன. குறிப்பாக ஆசிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், உற்சாகத்துடன் தொடங்கிய சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ், நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இதனால், அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.129.39 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.52.50 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.40 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.397.86 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 578.18 புள்ளிகள் கூடுதலுடன் 73,666.51-இல் தொடங்கிய சென்செக்ஸ், 73,227.32 வரை கீழே சென்றது. பின்னா், வா்த்தக இறுதியில் அதிகபட்சமாக 73,767.80 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 560.29 புள்ளிகள் (0.77 சதவீதம்) உயா்ந்து 73,648.62-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,057 பங்குகளில் 2,620 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,284 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 153 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
25 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக், விப்ரோ, எஸ்பிஐ உள்பட மொத்தம் 25 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், டாடா ஸ்டீல் ஆகிய 5 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 189 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 189.40 புள்ளிகள் (0.86 சதவீதம்) உயா்ந்து 22,336.40-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,198.15 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,375.65 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 5 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

