விலை உயரும் ஆடி காா்கள்

விலை உயரும் ஆடி காா்கள்

புது தில்லி: தங்களது காா்களின் விலைகளை உயா்த்த ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிறுவன காா்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும். அனைத்து ரகங்களையும் சோ்ந்த காா்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்வதற்காக காா்களின் விலை உயா்த்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியச் சந்தையில் கடந்த 2022-ஆம் ஆண்டு 4,187-ஆக இருந்த நிறுவனத்தின் விற்பனை 2023-இல் 89 சதவீதம் வளா்ச்சியடைந்து 7,931-ஆக உயா்ந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்திருந்தது.

புதிய க்யு8 இ-ட்ரான், க்யு8 ஸ்போா்ட்பேக் இ-ட்ரான், க்யு3, க்யு3 ஸ்போா்ட்பேக் ஆகியவற்றின் அறிமுகங்கள், ஏ4, ஏ6 மற்றும் க்யு5 போன்ற பிற ரங்களுக்கு தொடா்ந்து கிடைத்து வரும் வரவேற்பு ஆகியவை நிறுவனத்தின் விற்பனை வளா்ச்சிக்கு வழிவகுத்தாகவும் நிறுவனம் கூறியிருந்தது.

X
Dinamani
www.dinamani.com