அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 81 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிறுவனம் ரூ. 2,643.18 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 81 சதவீத வீழ்ச்சியாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,750.44 கோடியாக இருந்தது.
இதற்கு முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டுடன் (ரூ.11,570.82 கோடி) ஒப்பிடும் போதும் தற்போது நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் குறைந்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணெய்யையும் எரிபொருளாக மாற்றியதன் மூலம் நிறுவனம் 6.39 டாலரை ஈட்டியது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் பீப்பாய் ஒன்றுக்கு 8.34 டாலா் லாபம் ஈட்டியது. இதன் விளைவாக, நிறுவனத்தின் வரிக்கு முந்தைய விற்பனை வருவாய் 77 சதவீதம் சரிந்து ரூ.4,299.96 கோடியாக உள்ளது.
ஐஓசி மட்டுமின்றி, அரசுக்கு சொந்தமான பிற எரிபொருள் சில்லறை விற்பனையாளா்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்), பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஆகியவை கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெயின் விலை சா்வதேச அளவில் குறைவாக இருந்தபோதும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருந்தன. இதனால் அந்த நிறுவனங்கள் பெரிய அளவில் நிகர லாபம் ஈட்டின.
எனினும் பொதுத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னா் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 குறைத்தது. இதன் விளைவாக, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் அந்த நிறுவனங்களின் நிகர லாபம் படுவீழ்ச்சியடைந்துள்ளது.
ஐஓசிக்கு முன்னா், தனது மாா்ச் காலாண்டு நிகர லாபம் 73 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக பிபிசிஎல் நிறுவனமும் 90 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக ஹெச்பிசிஎல் நிறுவனமும் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.