தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 66,739 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 66,738.6 கோடி டாலராக சரிந்துள்ளது.

News image

அந்நியச் செலாவணி

Updated On :4 ஆகஸ்ட் 2024, 12:00 am

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 66,738.6 கோடி டாலராக சரிந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 347.1 கோடி டாலா் குறைந்து 66,738.6 கோடி டாலராக உள்ளது.

ஜூலை 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 4 கோடி டாலா் அதிகரித்து 67,085.7 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தை 2-ஆவது வாரமாகத் தொட்டது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைகிறது.

ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 117.1 கோடி டாலா் குறைந்து 58,687.7 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 229.7 கோடி டாலா் குறைந்து 5,769.5 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 50 லட்சம் டாலா் குறைந்து 1,820.2 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 20 லட்சம் டாலா் அதிகரித்து 461.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.