சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

அந்நியச் செலாவணிக் கையிருப்பு 71,700 கோடி டாலர் ஆக சரிவு!!

அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மாதம் அக்டோபர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,974.8 கோடி டாலராக சரிந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

Updated On :

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மாதம் அக்டோபர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,974.8 கோடி டாலராக சரிந்துள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 269.1 கோடி டாலர் குறைந்து 71,700 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.

கடந்த வாரம், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 126.9 கோடி டாலராக குறைந்து 71,974.8 கோடி டாலராக இருந்தது.

முன்னதாக, வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புநிதித் திட்டத்தின்மூலம் வங்கிகள் திரட்டிய சுமாா் 13,300 கோடி டாலா் வரவின் காரணமாக, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியுடந் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியிச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உச்சமாக 78,570.6 கோடி டாலராக இருந்தது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 208.8 கோடி டாலர் குறைந்து 59,111.8 கோடி டாலராக உல்ளது.

இந்த வாரத்தில் தங்க்ம் மதிப்பு 55.9 கோடி டாலர் குறைந்து 10,259.1 கோடி டாலராக இருப்பதாகவும், சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 4.7 கோடி டாலர் குறைந்து 1,855.8 கோடி டாலராக இருப்பதாக தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் கையிருப்பு நிலை 0.3 கோடி டாலர் அதிகரித்து 479 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

Summary

India's forex reserves dropped by USD 2.691 billion to USD 717.056 billion during the week ended October 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.