
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மையும், புதிய அன்னிய நிதி முதலீடுகளின் வருகையும், இந்திய பங்குச் சந்தையில் ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டால், தொடக்கத்தில் சரிந்து வர்த்தகமான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, பிற்பகலில் மீண்டு பிறகு சரிந்து முடிந்தது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பாக மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தார் என்ற அறிக்கையாலும் இன்றைய காலை நேர வர்த்தகம் சரிந்து தொடங்கியது.
இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 400.27 புள்ளிகள் உயர்ந்து 80,000 புள்ளிகளைத் தொட்டு 80,106.18 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 105.3 புள்ளிகள் உயர்ந்து 24,472.80 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 479.78 புள்ளிகள் சரிந்து 79,226.13-ஆகவும், நிஃப்டி 155.4 புள்ளிகள் சரிந்து 24,212.10-ஆகவும் வர்த்தகமானது.
சென்செக்ஸ் டாப்-30 குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
அதானி போர்ட்ஸ், என்டிபிசி, பவர் கிரிட் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன.
அதானி எனர்ஜி 17 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் 13.39 சதவிகிதமும் சரிந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிந்து பிறகு மீண்டது அம்புஜா சிமெண்ட்ஸ்.
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் ஹாங்காங் உயர்ந்தும் ஷாங்காய் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று உயர்வுடன் முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரூ.406.72 கோடி பங்குகளை வாங்கி குவித்ததுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.29 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 79.89 டாலராக உயர்ந்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தை முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 56.99 புள்ளிகள் சரிந்து 79,648.92 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.50 புள்ளிகள் சரிந்து 24,347.00 புள்ளிகளாக முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.