நிஃப்டி 397, சென்செக்ஸ் 1,331 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

வலுவான உலகளாவிய சந்தை ஏற்றத்தால், இன்றைய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்ந்து வர்த்தகமானது.
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்கு சந்தை | நிஃப்டி
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்கு சந்தை | நிஃப்டி
Published on
Updated on
1 min read

மும்பை: வலுவான உலகளாவிய சந்தை ஏற்றத்தால், இன்றைய வர்த்தகத்தில், ஐடி துறை மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்ததால் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்ந்து முடிந்தது.

நிஃப்டி டாப் 50 பங்குகள் 397.40 புள்ளிகள் உயர்ந்து 25,541.15 ஆக முடிந்தது. அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1330.96 புள்ளிகள் உயர்ந்து 80,436.85 ஆக முடிந்தது.

சென்செக்ஸில் டாப் 30 பங்குகள் கொண்ட நிறுவனங்கள் இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் உயர்வுடன் வர்த்தகமானது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்போசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.

இன்றைய வர்த்தகத்தில் மிட் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் அதிக லாபத்துடன் வர்த்தகமானது. ஐடி மற்றும் ரியாலிட்டி பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பார்மா பங்குகள் உயர்ந்து முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் பேங்க் நிஃப்டி குறியீடு 789.60 புள்ளிகள் உயர்ந்து 50,516.90 ஆக முடிவடைந்தது. நிஃப்டி மிட்கேப் 100 பங்குகள் 1,108.95 புள்ளிகள் அதிகரித்து 57,656ல் முடித்தது.

விப்ரோ, டெக் மஹிந்திரா, கிராசிம், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் இன்றைய நிஃப்டி 50-ல் உயர்ந்து முடிந்தது. அதே நேரத்தில் டிவிஸ் லேப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேப் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது. அமெரிக்க பங்கு சந்தை நேற்று (வியாழக்கிழமை) அதிக லாபத்துடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமையன்று ரூ.2,595.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,236.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா 0.25 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 80.84 டாலராக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.