எழுச்சியுடன் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!

இன்றைய வர்த்தகத்தில் எழுச்சியுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!
பங்குச் சந்தை
பங்குச் சந்தை
Published on
Updated on
1 min read

மும்பை: சர்வதேச சந்தைகளில் கமாடிட்டி, தொலைத்தொடர்பு மற்றும் நுகர்வோர் பங்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கியதைத் தொடர்ந்து பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடு சென்செக்ஸ் இன்று 81,053.19ல் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.89 புள்ளிகள் உயர்ந்து 81,053.19 புள்ளிகளில் நிலைபெற்றது. அதே வேளையில் காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 331.15 புள்ளிகள் உயர்ந்து 81,236.45 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41.30 புள்ளிகள் உயர்ந்து 24,811.50 புள்ளிகளில் முடிவடைந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 1.63 சதவிகிதமும், டாடா ஸ்டீல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. மறுபுறம் ரெட்டீஸ் லேப்ஸ், என்டிபிசி, விப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை சரிந்து முடிந்தது.

துறை ரீதியாக மின்சார பங்குகள் தலா 1 சதவிகிதமும் பார்மா, எண்ணெய் & எரிவாயு, ஆட்டோ, ஐடி ஆகியவை சற்று குறைந்தது வர்த்தகமானது. மறுபுறம் வங்கி, எஃப்எம்சிஜி, மெட்டல், ரியாலிட்டி, டெலிகாம் குறியீடுகள் 0.5 முதல் 1.4 சதவிகிதம் உயர்ந்தது.

நேர்மறையான உலகளாவிய போக்குகள் காரணமாக முதலீட்டாளர்கள் போர்ட்ஃபோலியோ உள்ள பங்குகள் இன்று லாபத்தில் முடிந்த நிலையில், அமெரிக்காவில் விவசாயம் அல்லாத ஊதியம் தொடர்பான தரவுகள் தொடர்ந்து சரிந்து வருவதால், செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகளை இது உறுதிப்படுத்தி வருகிறது என்று ஜியோஜித் நிதி சேவைகளின் தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.

அபாட் இந்தியா, அலெம்பிக், அசோக் லேலண்ட், பன்சாலி இன்ஜினியரிங், கோல்கேட் பாமோலிவ், கோரமண்டல் இன்டர்நேஷனல், ஃபினோ பேமெண்ட்ஸ், ஜில்லெட் இந்தியா, குஃபிக் பயோ, ஐநாக்ஸ் கிரீன், ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், எம் அண்ட் எம் ஃபைனான்ஷியல், மோர்பென் லேப், எம்பாசிஸ், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், ரானே மெட்ராஸ், சட்லஜ் டெக்ஸ்டைல்ஸ், டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன், டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ், டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட 330 க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ, சியோல் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து முடிந்தது. அதே நேரத்தில் ஷாங்காய் சரிந்து முடிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (புதன்கிழமை) மீண்டும் விற்பனையாளர்களாக மாறி ரூ.799.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.21 சதவிகிதம் உயர்ந்து 76.21 அமெரிக்க டாலராக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com