வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ரூ.2000 நோட்டுகள் 98.08% திரும்ப பெறப்பட்டன: ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்தது.

News image
ரிசர்வ் வங்கி
Updated On :2 டிசம்பர் 2024, 4:34 pm

DIN

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளில் 98.08% வங்கி அமைப்புக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், ரூ.6,839 கோடி மட்டுமே பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமானவையாக இருந்தாலும், மே 19, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்திலிருந்து ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

மே 19, 2023 அன்று வணிக முடிவில் ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்திலிருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, நவம்பர் 29, 2024 அன்று வணிக முடிவில் ரூ.6,839 கோடியாக குறைந்தது. இவ்வாறு, 2023 மே 19 நிலவரப்படி புழக்கத்திலிருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.08% திருப்பித் பெறப்பட்டுள்ளன என்று தனது அறிக்கையில் தெரிவித்தது.

அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் மற்றும் அல்லது மாற்றுவதற்கான வசதி அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வசதியானது அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 19 அலுவலகங்களில் இன்னும் கிடைக்க பெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நாட்டின் எந்த தபால் நிலையத்திலிருந்தும் ரூ .2,000 நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதே வேளையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.