
புதுதில்லி: எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களான 'எல்சினா' உள்ளூரில் உள்ள மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்கவும் ரூ.72,500 கோடி ஆதரவு தொகுப்பைக் அரசிடம் கோரியுள்ளது.
நாட்டின் பழமையான தொழில் அமைப்பான எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, மின்னணு பிரிவில் உள்ள உள்ளீடுகளுக்கான தேவை-விநியோக பற்றாக்குறை 2030ம் ஆண்டில் சுமார் ரூ.21 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து எல்சினா பொதுச் செயலாளர் ராஜு கோயல் கூறியதாவது:
குறைந்த வருவாய், அதிக செயல்பாட்டு செலவு மற்றும் நீண்ட காலம் காத்திருப்பு ஆகிய காரணங்களால் மின்னணு கூறுகளில் முதலீட்டை விரிவுபடுத்த மக்கள் தயங்குகின்றனர். தொழில்துறையின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக கேபெக்ஸ் தொகையாக 2.14 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையான 6.43 பில்லியன் அமெரிக்க டாலர் உள்பட 8.57 பில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் அரசிடம் கோரியுள்ளோம்.
இதையும் படிக்க: உலக செஸ் சாம்பியன்ஷிப்: 11வது சுற்றில் குகேஷ் வெற்றி!
அரசு ஏற்கனவே இந்தியா செமிகண்டக்டர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ் இன்றுவரை ரூ.1.52 லட்சம் கோடி முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. செமிகண்டக்டர் அல்லாத கூறுகளுக்கான ஆதரவு 2030 க்குள் 50 லட்சம் கூடுதல் வேலைகளை உருவாக்கும் என்றார்.
எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் கூற்றுப்படி, இந்தியாவில் குறைக்கடத்தி அல்லாத உற்பத்தி 2022ம் ஆண்டில் சுமார் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2026ம் ஆண்டில் சுமார் 20.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், வணிகம் வழக்கம் போல் தொடர்ந்தால் 2030ம் ஆண்டில் சுமார் 37 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் எட்டும் என்றும் இதனால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 248 பில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறை ஏற்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.