மும்பை: வட்டி விகிதங்கள் மீதான ஃபெடரல் ரிசா்வின் அறிவிப்பும், தொடர்ந்து அந்நிய நிதி வெளியேறி வருவதால் தடுமாறும் நிறுவனங்களாலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியும் இன்றும் சரிந்து நிறைவடைந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214.08 புள்ளிகள் சரிந்து 79,003.97 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.8 புள்ளிகள் குறைந்து 23,887.90 புள்ளிகளாக இருந்தது.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 1,176.46 புள்ளிகள் சரிந்து 78,041.59 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 375.05 புள்ளிகள் சரிந்து 23,576.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
இதையும் படிக்க: சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 8% உயா்வு
இன்றைய டாப் 30 ப்ளூ சிப் பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஐ.டி.சி, லார்சன் & டூப்ரோ, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி சரிந்து முடிந்தது. அதே வேளையில், டைட்டன், என்டிபிசி, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
ரியாலிட்டி குறியீடு 4 சதவிகிதமும், ஆட்டோமொபைல், ஐடி, கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல், டெலிகாம், பொதுத்துறை வங்கி ஆகியவை தலா 2 சதவிகிதமும் வரை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில் சியோல் சரிந்தும், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சற்று உயர்ந்து முடிந்தது. வால் ஸ்ட்ரீட் நேற்று (வியாழகிழமை) ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.69 சதவிகிதம் குறைந்து 72.38 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!

5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!

பங்குச் சந்தை வீழ்ச்சி: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி... சென்செக்ஸ் 370 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி 1 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



