25 ஆண்டு நிறைவு செய்த ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை!

Reliance Jamnagar Refinery
Reliance Jamnagar Refinery
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 28, 1999 அன்று ரிலையன்ஸ் தனது முதல் சுத்திகரிப்பு ஆலையை குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கியது.

இந்த சுத்திகரிப்பு ஆலையானது, ஒரே இரவில் இந்தியாவை எரிபொருள் பற்றாக்குறை நாடாக இருந்து, தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியது. பிறகு உபரி நாடாகவும், அதன் பிறகு ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் பெட்ரோல் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்தது. இன்று ஜாம்நகர் உலகின் சுத்திகரிப்பு மையமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நிலத்தடி மற்றும் கடலுக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை பதப்படுத்தி, வெவ்வேறு வெப்பநிலையில் கொதித்து ஆவியாகி பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

இதையும் படிக்க: வர்த்தகம் 2024

ரிலையன்ஸ் நிறுவனரான திருபாய் அம்பானி, சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் தனது நீண்டகால கனவை நிறைவேற்ற விரும்பியபோது, ஜாம்நகருக்கு அருகிலுள்ள வறண்ட பகுதியான மோதிகாவ்டி பகுதியில் அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு சாலைகள், மின்சாரம், போதுமான குடிநீர் கூட இல்லாத பாலைவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று திட்ட ஆலோசகர்கள் திருபாய்க்கு அறிவுறுத்தினர்.

முதல் முதலில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்குவது பற்றி முதலில் பேசிய போது, பெரும்பாலான நிபுணர்கள், ஒரு இந்திய நிறுவனமானது மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சாத்தியமில்லை என்றனர்.

அதே வேளையில், உள்கட்டமைப்பு பற்றாக்குறையை மற்றும் ஜாம்நகரைத் தாக்கிய கடுமையான சூறாவளி இருந்த போதிலும், 33 மாதங்களில் ரிலையன்ஸ் இந்த சாதனையை செய்து முடித்தது.

மிக முக்கியமாக, ஆசியாவில் உள்ள சமகால சுத்திகரிப்பு நிலையங்களுடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு 27 மில்லியன் டன் திறன் கொண்ட அலை, அதாவது நாள் ஒன்றுக்கு 5,60,000 பீப்பாய்கள் என்றும், பிறகு அதை 33 மில்லியன் டன்னாக விரிவுபடுத்தப்பட்டது.

இதையும் படிக்க: 21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை

தற்போது ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகமானது, ஆசியாவின் மிகப்பெரிய மாந்தோப்பு அமையபெற்றது. இங்கு சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மா மரங்கள் உள்ளன. இது இங்குள்ள மிகப்பெரிய சதுப்புநில பெல்ட் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் புகலிடமாக அமையபெற்றது.

இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, ரிலையன்ஸ், மற்றொரு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவியது. இதில் நாள் ஒன்றுக்கு 5,80,000 பீப்பாய்கள் செயலாக்க திறன் கொண்டதாக அமைந்தது. இது ஜாம்நகரை உலகின் மிகப்பெரிய ஒற்றை தள சுத்திகரிப்பு வளாகமாக மாற்றியது.

புதிய சுத்திகரிப்பு ஆலை ஏற்றுமதி சந்தையை மட்டுமே பூர்த்தி செய்யும் வேளையில், பழைய ஆலையானது உள்நாட்டு சந்தை தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com