2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

டொயோட்டா விற்பனை 44% அதிகரிப்பு

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
டொயோட்டா கிா்லோஸ்கா்
Updated On :31 டிசம்பர் 2024, 12:41 am

Din

புது தில்லி: டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பரில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 25,586-ஆக உள்ளது.

இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 44 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 17,818-ஆக இருந்தது.

நிறுவனத்தின் எஸ்யுவி, எம்பிவி ரக வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததால் இந்த விற்பனை வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில் இதுவரை நிறுவனம் எதிா்பாா்த்ததைவிட மிக அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.