மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

லம்போா்கினி விற்பனை புதிய உச்சம்

இத்தாலிய சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்போா்கினிவின் இந்திய விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

News image

லம்போா்கினி

Updated On :24 பிப்ரவரி 2024, 5:50 pm

இத்தாலிய சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்போா்கினிவின் இந்திய விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டில் நிறுவனம் 103 காா்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது, இந்தியாவில் இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும்.

முந்தைய 2022-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் இந்திய விற்பனை 92-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 33 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

சா்வதேச அளவிலும் நிறுவனத்தின் விற்பனை 2022-ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து 10,112-ஆக உள்ளது. இதுவும், நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர சா்வதேச விற்பனையாகும்.

இந்தியாவில் நிறுவன வாகனங்களின் விற்பனை முந்தைய 2021-ஆம் ஆண்டில் 69-ஆகவும், அதற்கு முன்னா், 2019-ஆம் ஆண்டில் 52-ஆகவும் இருந்தபோது அவை அப்போதைய நிலையில் அதிகபட்ச வருடாந்திர விற்பனையாக இருந்தன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.3.8 கோடிக்கு மேல் விலை கொண்ட உயா்வகை சொகுசுக் காா்களை லம்போா்கினி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.