80,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்! 24 நிறுவன பங்குகள் உயர்வு!

வணிகத்தின் 3வது நாளான இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வர்த்தகத்தின் 3வது நாளான இன்று (ஜூலை 3) பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இதேபோன்று நிஃப்டியும் உயர்வுடன் முடிந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது.

வணிகத்தின் 2வது நாளான நேற்று சென்செக்ஸ் புள்ளிகள் புதிய உச்சத்தை (79,855 புள்ளிகள்) எட்டியிருந்தாலும், வணிக நேர முடிவில் பெரும் மாற்றம் இல்லாமல் சரிவுடனே முடிந்தது.

இன்றைய வணிகத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 545.34 புள்ளிகள் உயர்ந்து 79,986.80 புள்ளிகளுடன் நிறைவு பெற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. கிட்டத்தட்ட 80 ஆயிரம் புள்ளிகள் நெருக்கத்துடன் முடிந்துள்ளது. மொத்த வணிகத்தில் இது 0.69% உயர்வாகும்.

இன்றைய வணிகத்தின் தொடக்கமே 80,013.77 புள்ளிகளுடன் உற்சாகத்துடன் இருந்தது. படிப்படியாக உயர்ந்து 80,074.30 என்ற புதிய உச்சத்தை செக்செக்ஸ் பதிவு செய்தது. எனினும் பிற்பாதியில் சரியத் தொடங்கியது. இறுதியில் 545 புள்ளிகள் உயர்ந்து 79,754.95 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 162.65 புள்ளிகள் உயர்ந்து, 24,286.50 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.67% உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்பட்டன.

கோப்புப் படம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயா்வு

அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ், மாருது சுசூகி நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக எச்.யு.எல்., பஜாஜ் பின்சர்வ், கோட்டாக் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி., எஸ்.பி.ஐ., அதானி போர்ட்ஸ், எம்&எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று ஏசியன் பெயின்ட்ஸ், எல்&ட்ட், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com