வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சரிந்த சென்செக்ஸ்!

வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் 53.07 புள்ளிகள் சரிந்து 79,996.60 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.70 புள்ளிகள் உயர்ந்து 24,323.85 புள்ளிகளாக உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பை: கடந்த சில அமர்வுகளில் வரலாறு காணாத உயர்வு பிறகு, ப்ளூ சிப் பங்குகளான எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளில் பங்குகளை வாடிக்கையாளர்கள் விற்பனை செய்ய தொடங்கியதால் இன்றைய காலை நேர ஆரம்ப வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகள் சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 53.07 புள்ளிகள் சரிந்து 79,996.60 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.70 புள்ளிகள் உயர்ந்து 24,323.85 புள்ளிகளாக உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் ஹெச்டிஎப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, டைட்டன், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, பவர் கிரிட், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது. அதே வேளையில் சன் பார்மாசூட்டிகல்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

என்எஸ்இ நிஃப்டி 50ல் ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்திலும், அதே வேளையில் ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன் கம்பெனி, எல்டிஐஎம்ட்ரீ, டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடந்தது.

லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் கலவையான லாபத்துடன் முடிவடைந்தது. எனர்ஜி மற்றும் பார்மா பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன, அதே நேரத்தில் நிதி சேவைகள் மற்றும் வங்கி பங்குகள் சரிந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் சுமார் ரூ.2,575.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஆசிய சந்தைகளில் சியோல் ஏற்றத்திலும், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகள் சரிந்தும் வர்த்தகமானது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான பங்குச் சந்தைகள் அமெரிக்க சகாக்களிடமிருந்து குறிப்புகள் வராததால் குறைவான வர்த்தகத்தில் முடிந்தது என்று ஸ்டாக்ஸ் பாக்ஸின் ஆய்வாளர் அவ்தூத் பாக்கர் தெரிவித்துள்ளார். அதே வேளையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க சந்தைகளுக்கு (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.37 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 87.11 டாலராக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com