சரிவுடன் தொடங்கி, சரிவுடன் முடிந்த நிஃப்டி, சென்செக்ஸ்!

பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை: பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது. பங்குச் சந்தை சாதனை உயர்வுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை இன்று சரிந்து வர்த்தகமானது. அதே வேளையில் ஆசிய சந்தைகளின் பலவீனமான போக்கும் இதற்கு வழிவகுத்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 132.22 புள்ளிகளை இழந்து 79,879.61 புள்ளிகளுடனும், நிஃப்டி-50 ஆனது 34.70 புள்ளிகளை இழந்து 24,289.15 புள்ளிகளுடனும் வர்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.30 புள்ளிகள் குறைந்து 24,320.55 புள்ளிகளாக முடிந்த நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீடான பிஎஸ்இ 36.22 புள்ளிகள் சரிந்து 79,960.38 புள்ளிகளாக முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டிவிஸ் லேப்ஸ், பிபிசிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது.

ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐடிசி, விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்த நிலையில், ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமையன்று) லாபத்தில் முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (வெள்ளிக்கிழமை) அன்று ரூ.1,241.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.97 சதவிகிதம் குறைந்து 85.70 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com