தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பங்குச்சந்தையில் மீண்டும் உற்சாகம்: சென்செக்ஸ் 2,303 புள்ளிகள்

News image
Updated On :5 ஜூன் 2024, 10:06 pm

தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்திருந்த பங்குச்சந்தை புதன்கிழமை மீண்டும் எழுச்சி பெற்றது.

இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,303 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. இதையடுத்து, ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.13.13 லட்சம் கோடி உயர்ந்தது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் வாக்குக் கணிப்பில் தெரிவித்ததைவிட மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு தொகுதிகள் குறைந்ததால் அதன் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இதனால், சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், மத்தியில் மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்று செய்திகள் வெளியானது. இது சந்தையில் உற்சாகத்தை வரவழைத்தது. இதனால், வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ, மெட்டல் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் 2 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

லாபம் ரூ.13.13 லட்சம் கோடி: சந்தை மூலதன மதிப்பு ரூ.13.13 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.407.97 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் ரூ.13.13 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.12,436.22 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,318.98 கோடிக்கும் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 948.83 புள்ளிகள் கூடுதலுடன் 73,027.88-இல் தொடங்கி 71,879.44 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 74,534.82 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 2,303.19 புள்ளிகள் (3.20 சதவீதம்) கூடுதலுடன் 74,382.24-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,918 பங்குகளில் 2,599 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,221 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. 98 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

30 பங்குகளும் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்

ஆகியவை 4 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்தன. இவை உள்பட சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்றன.

நிஃப்டி 736 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நி நிஃப்டி 243.85 புள்ளிகள் கூடுதலுடன் 22,128.35 தொடங்கி 21,791.95 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 22,670.40 வரை மேலே சென்ற நிஃப்டி , இறுதியில் 735.85 புள்ளிகள் (3.36 சதவீதம்) கூடுதலுடன் 22,620.35-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 48 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

பிபிசிஎல், எல் அண்ட் டி ஆகிய 2 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.