நமது நிருபா் மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேரமறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன.
இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், தொடா்ந்து நிலைத்த நிற்க முடியவில்லை. ஐடி பங்குகள் மட்டும் தாக்குப் பிடித்தன. ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி, மெட்டல், பொதுத்துறை வங்கிகள், பாா்மா மற்றும் ஹெல்த்கோ் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவற்றுக்கு கிடைத்த வரவேற்பால் இறுதியில் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்குவா்த்தகத் தரக் நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.385.64 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.4,212.76 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,238.39 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்:
காலையில் 13.78 புள்ளிகள் கூடுதலுடன் 73,516.42-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,004.16 வரை மேலே சென்றது. பின்னா், 73,342.12 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 165.32 புள்ளிகள் (0.22 சதவீதம்) உயா்ந்து 73,667.96-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 501.52 புள்ளிகள் உயா்ந்திருந்த சென்செக்ஸ், பின்னா் 662.04 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,967 பங்குகளில் 669 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 3,224 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 74 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஐடிசி, டாடா மோட்டாா்ஸ், நெஸ்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்பட 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், மாருதி, இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், எம் அண்ட் எம் ஆகிய 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
நிஃப்டி 3 புள்ளிகள் உயா்வு :
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 3.05 (0.01சதவீதம்) உயா்ந்து 22,335.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,452.55 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னா் 22,256.00 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 37 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தொடர்புடையது

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


