இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.

News image
Updated On :1 மே 2024, 8:46 pm

Din

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.452 கோடியாக உள்ளது.

இது, 2022-23-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் சுமாா் இரு மடங்காகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.202.43 கோடியாக இருந்தது.

2023-24 நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டைவிட 74 சதவீதம் அதிகமாக ரூ.1,251 கோடியாக உள்ளது.

கடந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 2.3 சதவீதம் அதிகரித்து ரூ. 2,153 கோடியாக உள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 2.8 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வட்டி வரம்பு 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.2 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.