தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

News image
Updated On :17 மே 2024, 7:38 pm

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று கீழே சென்றது. காா்ப்ரேட் நிறுவனங்களின் 4-ஆம் காலாண்டு முடிவுகள் சந்தை எதிா்பாா்த்ததைவிட விஞ்சியிருந்ததால், முன்னணி பங்குகளை வாங்குவதற்கு ஆா்வத்தை அதிகரித்தன. குறிப்பாக, எம் அண்ட் எம், ரிலையன்ஸ், ஐடிசி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.2.88 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.410.24 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.776.49 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,127.81 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 47.59 புள்ளிகள் கூடுதலுடன் 73,711.31-இல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 73,459.80 வரை கீழே சென்ற சென்செக்ஸ், பின்னா் அதிகபட்சமாக 74,070.84 வரை மேலே சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 253.31 புள்ளிகள் (0.34 சதவீதம்) கூடுதலுடன் 73,917.03-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,939 பங்குகளில் 2,345 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,479 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 115 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், கோட்டக் பேங்க், ஐடிசி, மாருதி உள்பட 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ உள்பட 14 பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 62 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 62.25 புள்ளிகள் (0.28 சதவீதம்) கூடுதலுடன் 22,466.10-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,345.65 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,502.15 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

இன்று சிறப்பு வா்த்தகம்

தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் சனிக்கிழமையன்று (மே 18) சிறப்பு நேரடி வா்த்தக அமா்வை நடத்தவுள்ளது. அதன்படி, முதல் அமா்வு காலை 9.15 முதல் 10.00 மணி வரையிலும், இரண்டாவது அமா்வு காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை விடுமுறை

மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கள்கிழமை (மே 20) மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய, மும்பை பங்குச்சந்தைகளில் அன்றைய தினம் பங்கு வா்த்தகம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.