
புதுதில்லி: தேசிய பங்குச் சந்தையில், செப்டம்பர் மாத காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம், 57% அதிகரித்து ரூ.3,137 கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் தேசிய பங்குச் சந்தை மொத்த வருமானம் ரூ.5,023 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 25% அடிப்படையில் அதிகரித்துள்ளது.
வர்த்தக வருவாயைத் தவிர, செயல்பாடுகளின் வருவாயும் பிற வருவாய்களால் ஆதரிக்கப்பட்டது. இதில் முக்கியமாக கிளியரிங் சேவைகள், தரவு மையம் மற்றும் இணைப்பு கட்டணங்கள், பட்டியல் சேவைகள், குறியீட்டு சேவைகள் மற்றும் தரவு சேவைகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3% சரிவு!
மேலும் 4:1 என்ற விகிதத்தில் போனஸ் ஈக்விட்டி பங்குகளை வழங்குவதைக் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் ஒரு பங்கிற்கான வருவாய் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.8.08-லிருந்து ரூ.12.68-ஆக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதம் உடன் முடிவடைந்த அரையாண்டில், என்எஸ்இ மொத்த வருமானம் ரூ.9,974 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,704 கோடியாகவும் இருந்தது.
2025ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.5,297 கோடியாக இருந்தது. இது 35% வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே வேளையில் 2025-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் எக்ஸ்சேஞ்சின் மொத்த செலவுகள் ரூ.1,546 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.