உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! வங்கி, எண்ணெய் நிறுவனப் பங்குகள் ஏற்றம்!

வாரத்தின் முதல் வணிக நாளான நேற்று சரிவுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வுடன் முடிந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது. வாரத்தின் முதல் வணிக நாளான நேற்று சரிவுடன் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்வுடன் முடிந்தது.

அதிகபட்சமாக வங்கி, இரும்பு, ஆட்டோமொபைல் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் ஏற்றத்துடன் இருந்தன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்றுவருவதால், பங்குச் சந்தையில் நேற்று சரிவு ஏற்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ. 94,017 கோடி பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே இந்த பதற்றமான சூழல் நிலவுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 694.39 புள்ளிகள் உயர்ந்து 79,476.63 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.88 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 202.95 புள்ளிகள் உயர்ந்து 24,198.3 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.91 சதவீதம் உயர்வாகும்.

22 நிறுவனப் பங்குகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை

78,542.16 என்ற புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. சற்று சரிந்து இன்றைய அதிகபட்சமாக 78,296.70 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 79,523.13 புள்ளிகள் என்ற இன்றைய உச்சத்தை எட்டியது. வணிக நேர முடிவில், 694.39 புள்ளிகள் உயர்ந்து 79,476.63 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் இருந்தன. எஞ்சிய 8 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகபட்சமாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனப் பங்குகள் 4.68% உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல் 3.64%, ஆக்சிஸ் வங்கி 2.85%, எச்டிஎஃப்சி வங்கி 2.56%, இந்தஸ் இந்த் வங்கி 2.48%, எஸ்பிஐ 2.34%, கோட்டாக் வங்கி 1.61%, அல்ட்ராடெக் சிமென்ட் 1.59%, ஐசிஐசிஐ வங்கி 1.53% உயர்ந்திருந்தன.

இதேபோன்று அதானி போர்ட்ஸ் -1.48%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.97%, ஐடிசி -0.91%, பாரதி ஏர்டெல் -0.81%, இன்ஃபோசிஸ் -0.54% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

நேற்று சரிவுடன் முடிந்த தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 23,916.50 புள்ளிகளுடன் தொடங்கியது. முற்பாதியில் சரிந்து 23,842.75 என்ற இன்றைய அதிகபட்ச சரிவைச் சந்தித்தது. எனினும் பிற்பாதியில் படிப்படியாக உயர்ந்து 24,229.05 என்ற இன்றைய உச்சத்தை எட்டியது.

முடிவில் 217.95 புள்ளிகள் உயர்ந்து 24,213 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கிளான்ட் பார்மா, எம்.ஆர்.பி.எல்., எச்.எஃப்.சி.எல்., அதானி டிரான்ஸ்மிஷன், ஜிந்தால், ஆயில் இந்தியா லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று ரெயின்போ சில்ரன்ஸ், டொரெண்ட் பவர், சரிகம இந்தியா, பாலிசி பஸார் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் இருந்தன.

2% வரை உயர்ந்த துறைகள்

வங்கி, இரும்பு, ஆட்டோமொபைல் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் 1 - 2 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com