
மிகவும் நிலையற்ற அமர்வில், இன்றைய வர்த்தகத்தில், இந்திய குறியீடு சிறிய மாற்றத்துடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 9.83 புள்ளிகள் உயர்ந்து 79,496.15-ஆகவும், நிஃப்டி 6.90 புள்ளிகள் சரிந்து 24,141.30-ஆகவும் முடிந்தது.
வாரத்தின் முதல் நாளான இன்று, கலவையான உலகளாவிய குறிப்புகளின் பின்னணியில், இந்திய குறியீடுகள் சரிந்து துவங்கி, பிறகு சிறிய அளவில் உயர்ந்ததும், சரிந்தும் முடிந்தது.
பவர் கிரிட் கார்ப், ட்ரென்ட், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்தும் ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், சிப்லா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் முடிந்தது.
இதையும் படிக்க : சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!
இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.8 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவிகிதமும் சரிந்தன.
துறைகளில், வங்கி குறியீடு 0.6 சதவிகிதமும், ஐடி குறியீடு 1 சதவிகிதமும் உயர்ந்ததும், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஹெல்த்கேர், மெட்டல், எண்ணெய் & எரிவாயு மற்றும் ஊடகம் 0.5 முதல் 1 சதவிகிதம் சரிந்தன.
திஷா ரிசோர்சஸ் (13.29%), லிப்பி சிஸ்டம்ஸ் (13.04%), வர்த்மான் ஹோல்ட் (12.57%), சாம்ராட் ஃபோர்ஜிங்ஸ் (12.27%), இன்டர் ஸ்டேட் ஆயில் (12.07%), தைன்வாலா கெம் (10.46%), மேக்சிமஸ் இன்டர்நேஷனல் (10.12%), பிகேவி இண்டஸ்ட்ரீஸ் (10.00%), தேரா சாப்ட்வேர் (10.00%) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஹோல்டிங்ஸ் (10.00%) ஆகிய பங்குகள் இன்றைய அமர்வில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தன.
கோபோர்ஜ், விப்ரோ, ஃபெடரல் வங்கி, இந்தியன் ஹோட்டல்ஸ், கிம்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், விம்தா லேப்ஸ், என்ஐஐடி, இந்திரபிரஸ்தா கேஸ், கார்டிரேட் டெக், கிருஷ்ணா டயக்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.