ஏற்ற, இறக்கத்திலும் மிதமான லாபத்துடன் முடிந்த பங்குச் சந்தை!

மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, இன்றைய வர்த்தகத்தில் எரிசக்தி, ஆட்டோ, மெட்டல் மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்து முடிந்தது.
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை
Published on
Updated on
2 min read

மும்பை: மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யில் எரிசக்தி, ஆட்டோ, மெட்டல் மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்தது முடந்தது. இதில் அதானி குழும பங்குகள் 12 சதவிகிதம் வரை உயர்ந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 166.1 புள்ளிகள் உயர்ந்து 80,170.16 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 74.35 புள்ளிகள் உயர்ந்து 24,268.85 புள்ளிகளாக இருந்தது.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 230.02 புள்ளிகள் உயர்ந்து 80,234.08 ஆகவும், நிஃப்டி 80.40 புள்ளிகள் உயர்ந்து 24,274.90 ஆகவும் நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தில் 2,470 பங்குகள் ஏற்றத்திலும், 1,302 பங்குகள் சரிந்தும், 105 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.

துறை குறியீடுகளில் நிஃப்டி எனர்ஜி, நிஃப்டி மீடியா, நிஃப்டி பொதுத்துறை நிறுவனம் மற்றும் நிஃப்டி மெட்டல் ஆகியவை 0.70% முதல் 1.50% வரை உயர்ந்து. இதற்கு நேர் எதிர்மறையாக நிஃப்டி பார்மா 0.65 சதவிகிதமும், நிஃப்டி ரியால்டி 0.5 சதவிகிதமும் குறைந்தது முடிந்தது.

இதையும் படிக்க: முதல்வர் பதவியை விரும்பவில்லை: ஏக்நாத் ஷிண்டே

ஊக்க நடவடிக்கையால் சீன சந்தை மீண்டெழுந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற வரும் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி கூட்டம் மற்றும் மத்திய கிழக்கில் நடைபெற்றும் வரும் போர்நிறுத்தம் ஒப்பந்தத்தால் உலகளாவிய உணர்வு நேர்மறையாக இருந்தது.

கௌதம் அதானி குழுமம் மீது சம்பந்தப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து அதானி கிரீன் எனர்ஜி வெளியிட்ட விளக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய அமர்வில் 11 அதானி குழும பங்குகளும் உயர்ந்து முடிந்தது. இதில் அதானி டோட்டல் கேஸ் 19.8% ஏற்றத்திலும், அதானி பவர் 19.5% ஏற்றத்திலும் வர்த்தகமானது.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் உள்ளிட்ட பிற குழும பங்குகளும் 6.3% முதல் 11.5% வரை வலுவான லாபத்தைப் பதிவு செய்தன.

இன்றைய வர்த்தகத்தில் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 20% வரை உயர்ந்து ரூ.88.10-ஐ தொட்டது. உலகளாவிய தரகு நிறுவனமான சிட்டி ரிசர்ச்சின் அறிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 16 க்குப் பிறகு இந்த அளவிற்கு இன்ட்ராடே வர்த்தகத்தில் ஓலா இன்று உயர்ந்து முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயரந்து முடிந்த நிலையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,157.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.05% உயர்ந்து பீப்பாய்க்கு 72.85 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com