கடந்த செப்டம்பா் மாதத்தில் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மொத்த விற்பனை 15 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டுச் சந்தையில் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பரில் 69,694-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் குறைவு.
மின்சார வாகனங்கள் உள்பட நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதம் 41,063-ஆகக் குறைந்துள்ளது. முந்தைய 2023 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 44,809-ஆக இருந்தது.
கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முழுமைக்கும் நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 79,931-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

2026ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த வாகன விற்பனை 2.83 கோடி: சியாம்

உள்நாட்டு பின்னலாடைகளின் விலை 7 % சதவீதம் உயா்வு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


