சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகம்
மூன்று வண்னங்களில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள்
மூன்று வண்னங்களில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள்ANI
Published on
Updated on
1 min read

தொழில் நுட்பத் துறையில் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் முன்பே அறிமுகமான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள், இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் முதல் இதற்கான முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிந்துகொள்ளக்கூடிய (wearable gadjet) சாதனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அணிந்துகொள்ளக்கூடிய வகையிலான சாதனங்களை வடிவமைத்து வருகின்றன.

அந்தவகையில் தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், சாம்சங் நிறுவனத்தின் மற்றொரு புதிய வெளியீடாக ஸ்மார்ட் மோதிரங்கள் அறிமுகமாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்களைப் போன்று, ஸ்மார்ட் வாட்ச்-களைப் போன்று தற்போது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் அறிமுகமாகியுள்ளன.

அனைத்துவிதமான பயனர்களும் பயன்படுத்தும் வகையில் 9 விதமான அளவுகளில் இந்த ஸ்மார் மோதிரங்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர், டைட்டானியம் கோல்டு ஆகிய மூன்று நிறங்களில் உள்ளன. வெளிப்புற உலோகம் டைட்டானியத்தால் ஆனது. இதனால் உடையாது, மழை அல்லது நீரில் இருந்தாலும் சாதனத்திற்கு சேதம் ஏற்படாது.

இதையும் படிக்க | யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அக். 18க்குள் ஸ்மார்ட் மோதிரங்களை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு 25 வாட்ஸ் அடாப்டர் இலவசமாகக் கொடுக்கப்படுவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

இதனை சாம்சங் தளத்திலோ, அல்லது சாம்சங் ஷோரூமிலோ முன்பதிவு செய்யலாம். விரைவில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற சமூக வலைதள சந்தைகளிலும் அறிமுகாமாகவுள்ளன. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரத்தின் விலை ரூ. 38,999 மட்டுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com