
இன்றைய வர்த்தகத்தில் நேர்மறையான உலகளாவிய சந்தைகளின் போக்கு இருந்ததால், பெஞ்ச்மார்க் குறியீடுகள் புதிய சாதனை உச்சத்தை எட்டியதுடன் காளையின் பிடியை இறுக்கியது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 666.25 புள்ளிகள் உயர்ந்து 85,836.12-ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 211.90 புள்ளிகள் உயர்ந்து 26,216.05-ஆக இருந்தது.
இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 85,930.43 புள்ளிகளாகவும், நிஃப்டி 26,250.90 புள்ளிகளாகவும் இருந்தன. அதே வேளையில் நிஃப்டி பேங்க் குறியீடு 54,467.35 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
நேர்மறையான உலகளாவிய குறிப்புகள் இருந்தபோதிலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து சாதனை படைத்த நிலையில், நிஃப்டி முதல் முறையாக 26,250.05-ஐ தொட்டது.
மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில் ஓஎன்ஜிசி, சிப்லா, என்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப், எல் & டி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
மெட்டல், ஆட்டோ ஆகிய துறைகளில் தலா 2 சதவிகிதமும், எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி குறியீடுகள் தலா 1 சதவிகிதமும் உயர்ந்தன. இருப்பினும், மூலதன பொருட்கள் குறியீடு 0.6 சதவிகிதம் சரிந்தது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடுகள் சமமாக முடிந்த வேளையில், ஸ்மால்கேப் குறியீடுகள் 0.4 சதவிகிதமாகவும் முடிவடைந்தன.
பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், ப்ளூ ஸ்டார், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், சியட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, லாயிட்ஸ் மெட்டல்ஸ், எம் அண்ட் எம், எம் & எம் பைனான்சியல், என்டிபிசி, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா பவர், ட்ரெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.973.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,778.99 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை மேலும் விற்றால் அவை உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் எளிதில் உறிஞ்சிவிடும் வன்னம் உள்னர் என்றார் ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டாளர் விஜயகுமார்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.08 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 73.52 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.