சாகச விரும்பிகளுக்கான சிஎஃப் மோட்டோ 450 எம்டி.!

சாகச விரும்பிகளுக்கான சிஎஃப் மோட்டோ 450 எம்டி.!
சிஎஃப் மோட்டோ 450 எம்டி..
சிஎஃப் மோட்டோ 450 எம்டி..
Published on
Updated on
1 min read

நெடுந்தூரங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்காக ரூ.4 லட்சத்தில் புதிய பைக் ஒன்றை சிஎஃப் மோட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இந்திய போக்குவரத்து சந்தையில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து 650cc மற்றும் 300cc மாடல்களுடன் தங்களது பைக்குகளை வெளியிட்டு தோல்வியடைந்தது.

இதனால், சாகசம் மற்றும் நெடுந்தூரப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய 450cc கொண்ட சிஎஃப் மோட்டோ 450 எம்டி பைக்கை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 4.5 லட்சம் வரை இருக்கும் என்றும், இது வருகிற ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450, கேடிம் 390 ஆகிய பைக்களுக்கு போட்டியாக இந்த பைக் களமிறக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • இரண்டு சிலிண்டர்களை கொண்டுள்ளது - 449.5 cc

  • திறன் (power) - 43.6 குதிரைத்திறன்

  • முடுக்குவிசை (torque) - 44.0 nm

  • பெட்ரோல் கொள்ளளவு - 17.5 லிட்டர்

  • கிரௌண்ட் கிளியரஸ் - 220 மில்லிமீட்டர்

  • இருக்கை உயரம் - 820 மில்லிமீட்டர்

  • இரண்டு சக்கரங்களுக்கு இடைவெளி - 1505 மில்லிமீட்டர்

  • எடை - 175 கிலோ கிராம்

  • கியர் - 6 கியர்கள்

  • ப்ரேக் - முன் பின் டிஸ்க் பிரேக்

இதையும் படிக்க: ஏப்ரலில் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்கள்! எதை வாங்கலாம்?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com