
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2025 ஆண்டின் புதிய மாடலாக டிஃபெண்டர் ஆக்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்யூவி கார்களுக்கு மத்தியில் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஃபெண்டர் ஆக்டாவின் சிறப்பம்சங்கள்..
இதில் எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என இரு வசதிகளும் உள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.2.59 கோடியாகவும், ஆர்டிஓ கட்டணம், காப்பீடு உள்பட மொத்த ஆன்ரோடு விலை ரூ.2,97 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பெட்ரா காப்பர் மற்றும் சாரென்ட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. டிபெண்டர் ஆக்டாவில் 6டி டைனமிக் சஸ்பென்ஷன் என்கிற புதிய தொழில்நுட்பத்தை முதன்முதலாக பயன்படுத்தியுள்ளனர்.
8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 90 லிட்டர் பெட்ரோல் வசதியுடன், 4 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறனும், 250 கி.மீ உச்சகட்ட வேகமும், 22 சக்கர அலாய் சக்கரங்கள், 11.4 அங்குல டிஸ்பிளேவும் கொண்டுள்ளது.
மேலும் பவர் ஸ்டீயரிங், ஏர் கன்டிஷனர், ஹீட்டர், அட்ஜெஸ்டபிள் ஸ்டீயரிங், ஓட்டுநர் இருக்கையை உயரத்திற்கு ஏற்ப அட்ஜெஸ் செய்யும் வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வெனிட்டி மிரர், ஆக்ஸசரி பவர் அவுட்லெட், பின்புற ஏசி, பார்க்கிங் சென்ஸார்கள், யூஎஸ்பி சார்ஜர், ஆடியோ தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த டிபெண்டர் ஆக்டா கரடுமுரடான பாதையிலும், தண்ணீரிலும் சிங்கம் போல சீறிப்பாயும் வகையில் இதன் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.