
ஹோண்டா நிறுவனத்தின் ஹைனஸ் சிபி350 என்ற அதிநவீன பைக் தற்போது போக்குவரத்து சந்தைகளில் வெளியாகியுள்ளது. இதில், டிஎல்எக்ஸ்., டிஎல்எக்ஸ் புரோ மற்றும் டிஎல்எக்ஸ் புரோ குரோம் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பைக்குகளில் 348.36cc ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றிருப்பதுடன், 20.7 குதிரைத் திறனையும், 30nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இதையும் படிக்க: விரைவில் அறிமுகமாகும் மோடோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன்!
மேலும் புதிய புதிய வாகன சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப bs6 OBD தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் இப்போது புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் புளூடூத் இணைப்புடன் கூடிய செமி டிஜிட்டல் கன்சோல், டூயல் சானல் abs ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் ஷோரூம் விலை ரூ.2.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15 லிட்டரும், 35 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சீட்டில் உயரம் 800 மில்லிமீட்டர். இது நீலம், சாம்பல், வெள்ளை, கருப்பு, அரக்கு உள்பட 8 நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஹோண்டா ஹைனஸ் சிபி350 ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் வண்டிகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தங்கம் விலை ரூ. 70,000-ஐ நெருங்கியது! மூன்று நாள்களில் ரூ. 4,165 உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.