நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தங்கம் விலை ரூ. 70,000-ஐ நெருங்கியது! மூன்று நாள்களில் ரூ. 4,165 உயர்வு!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :11 ஏப்ரல் 2025, 9:48 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 1,485 உயர்ந்துள்ளது.

கடந்த வார இறுதிமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ. 1,480, வியாழக்கிழமை ரூ. 1,200 தடாலடியாக அதிகரித்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,485 மீண்டும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் ரூ. 8,745-க்கும் ஒரு சவரன் ரூ. 69,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் மக்களும் சற்று நிம்மதியடைந்த நிலையில், மேலும் குறையுமா என்று எதிர்பார்த்து வந்த நிலையில், எதிர்மாறாக, மூன்று நாள்களில் ரூ. 4,165 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 108-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.