
புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்.பி.சி.சி இந்தியா லிமிடெட் நிறுவனமானது கிரேட்டர் நொய்டாவில் உள்ள 560 குடுயிறுப்புகளை மின்னணு மூலம் ஏலம் விட்டதில் ரூ.1,153 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் (மேற்கு) உள்ள 'ஆஸ்பயர் டிரீம் வேலி-யில்' 560 குடியிருப்புகளை இ-ஏலத்தின் மூலம் விற்பனை செய்ததில் சுமார் ரூ.1,153.13 கோடி ஈட்டியுள்ளதாக என்.பி.சி.சி இந்தியா தெரிவித்துள்ளது.
இதில் விற்பனை மதிப்பில் 1 சதவிகிதம் சந்தைப்படுத்தல் கட்டணம் என்.பி.சி.சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) கிரேட்டர் நொய்டாவில் இ-ஏலம் மூலம் 1,185 குடியிருப்புகளை ரூ.1,504.69 கோடிக்கு விற்பனை செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கி கடன் செலுத்துதல் உள்பட தற்போதைய பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என்று நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.