
மும்பை: அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக சரிந்ததாலும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வலுவான மீட்சியாலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ.86.07 ஆக நிலைபெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை 9 வரை இந்தியா மீதான 26 சதவிகித கட்டணங்களை நிறுத்தி வைத்தையடுத்து பெஞ்ச்மார்க் ஈக்விட்டி சென்செக்ஸ் உயர்ந்து முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.22 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.95 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.07 ஐ தொட்ட நிலையில், முடிவில் 61 காசுகள் உயர்ந்து ரூ.86.07 ஆக முடிந்தது.
புதன்கிழமையன்று இந்திய ரூபாயின் மதிப்பு 86.68 ஆக இருந்தது.
இதையும் படிக்க: வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!