வாரத்தின் முதல் நாளான இன்று(ஆக. 4) பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,765.83 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.35 மணியளவில் சென்செக்ஸ் 342.16 புள்ளிகள் அதிகரித்து 80,943.17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.85 புள்ளிகள் உயர்ந்து 24,695.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துறை ரீதியாக நிஃப்டி ஆட்டோ, மெட்டல், நிதி சேவைகள், எஃப்எம்சிஜி, பார்மா, பொதுத்துறை வங்கி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எண்ணெய் & எரிவாயு ஏற்றத்துடன் காணப்படு நிலையில் நிஃப்டி ஐடி குறியீடு துறை மட்டும் சரிவைச் சந்தித்து வருகிறது.
ஹீரோ மோட்டோகார்ப், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா ஸ்டீல், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்து அதிக லாபம் ஈட்டின.
அதேநேரத்தில் ஓஎன்ஜிசி, டாடா நுகர்வோர், பவர் கிரிட், அப்போலோ, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.
இதையும் படிக்க | சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.