ஆப்பிள் நிறுவனத்தில் கோடிகளில் வேலை வேண்டுமா? சம்பள விவரங்கள் இதோ..!

ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சம்பள விவரங்கள்
ஆப்பிள் நிறுவனத்தில் கோடிகளில் வேலை வேண்டுமா? சம்பள விவரங்கள் இதோ..!
Published on
Updated on
1 min read

ஆப்பிள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் வியக்கத்தக்கதாக உள்ளதாக பல்வேறு தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்ப உலகில் நாள்தோறும் மாற்றங்கள் நிலவி வரும்நிலையில், நிறுவனங்களும் தங்களுக்கேற்ற பொருத்தமான ஊழியர்களை கவர்ந்திழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மெட்டா நிறுவனத்தில் ஏஐ பிரிவில் பணிபுரிய இந்தியர் ஒருவருக்கு சுமார் ரூ. 857 கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

நல்ல சம்பளம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் வேறு நிறுவனங்களுக்கு மாற ஊழியர்கள் முற்படுவதை, நிறுவனங்கள் விரும்புவதில்லை.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள விவரம் குறித்து வெளியாகியுள்ளது. இதன்மூலம், திறமையான ஊழியர்களை பணியமர்த்தவும், தக்கவைத்துக் கொள்ளவும் ஆப்பிள் முயல்கிறதுபோல.

அதன்படி, ஆப்பிள் வெளியிட்டுள்ள சம்பள விவரங்கள்

மென்பொருள் மேம்பாட்டு பொறியாளார் (Software Development Engineer - Applications): சுமார் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை

தரவு அறிவியல் பிரிவில் (Data Scientist): சுமார் ரூ. 92.5 லட்சம் முதல் ரூ. 2.8 கோடி வரை

இயந்திரக் கற்றல் பொறியாளர் (Machine Learning Engineer): சுமார் ரூ. 1.25 கோடி முதல் ரூ. 2.73 கோடி வரை

இயந்திரக் கற்றல் ஆய்வாளர் (Machine Learning Researcher): சுமார் ரூ. 1 கோடி முதல் ரூ. 2.73 கோடி வரை

மென்பொருள் பொறியியல் மேலாளர் (Software Engineering Manager): சுமார் ரூ. 1.46 கோடி முதல் ரூ. 3.3 கோடி வரை

பயனர் இடைமுக வடிவமைப்புப் பிரிவில் (Human Interface Designer): சுமார் ரூ. 1 கோடி முதல் ரூ. 4.10 கோடி வரை

வன்பொருள் பொறியாளர் (Hardware Systems Engineer): சுமார் ரூ. 1.1 கோடி முதல் ரூ. 3.3 கோடி வரை

சரிபார்ப்பு பொறியாளர் (Design Verification Engineer): சுமார் ரூ. 90.4 லட்சம் முதல் ரூ. 2.73 கோடி வரை

மேலும், இவற்றில் போனஸ் மற்றும் பங்குகளோ எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Apple salary packages for software engineers, data scientists and others revealed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com