இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

ஓப்போ கே 13 டர்போ வரிசையில் இரு புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ கே 13 டர்போ
ஓப்போ கே 13 டர்போபடம் / நன்றி - ஓப்போ
Published on
Updated on
1 min read

ஓப்போ கே 13 டர்போ வரிசையில் இரு புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில், 7000mAh திறனுடன் கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

ஓப்போ கே 13 டர்போ மற்றும் ஓப்போ கே 13 டர்போ ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

இந்திய சந்தையில் இதன் விலை என்ன, என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பது குறித்த அறிவிப்பை ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஓப்போ கே 13 டர்போ சிறப்புகள்

  • ஓப்போ கே 13 டர்போ ஸ்மார்போன் 6.8 அங்குல அமோலிட் திரை கொண்டது.

  • ஸ்நாப்டிராகன் 8எஸ் 4ஆம் தலைமுறை புராசஸர் உடையது.

  • பயன்பாட்டின்போது வெப்பமாவதை தடுக்கும் வகையில் டர்போ கூலிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP முதன்மை கேமராவும், 2MP ஐஓஎஸ் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 16MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  • மத்திய தர விலையில் வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் 7000mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • நீர் புகாத்தன்மைக்காக IPX9 திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீரில் நனைந்தாலும் ஸ்மார்ட்போனுக்கு ஆபத்து இல்லை என ஓப்போ கூறுகிறது.

  • இதன் விலை ரூ. 24,999.

ஓப்போ கே 13 டர்போ ப்ரோ சிறப்புகள்

ஓப்போ கே 13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனில் புராசஸரை தவிர மேற்கண்ட சிறப்பம்சங்கள் அனைத்தும் உள்ளன. இவை தவிர

  • கேமராவில் 4K விடியோ பதிவு செய்யும் திறன் உள்ளது.

  • ஓப்போ கே 13 டர்போ ப்ரோ ஸ்மார்ப்டோன் டைமன்சிட்டி 8450 புராசஸர் கொண்டுள்ளது.

  • இதன் விலை ரூ. 33,154.

இதையும் படிக்க | எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

Summary

OPPO K13 Turbo Series Launched in India with Snapdragon 8s Gen 4 and 7000mAh Battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com