பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை அளித்த பொதுத்துறை வங்கிகள்!

உத்தரகண்ட் மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை தலா ரூ. 1 கோடி வழங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: உத்தரகண்ட் மாவட்டத்தில் உள்ள தாராலி மற்றும் ஹர்சில் ஆகிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை தலா ரூ. 1 கோடி வழங்கியுள்ளது.

இந்த முடிவு உத்தரகண்ட் மக்களுடனான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வேரூன்றிய பிணைப்பை பிரதிபலிக்கிறது என்றும் ஆகஸ்ட் 5, 2025 அன்று மாநிலத்தைத் தாக்கிய கனமழையின் பிரதிபலிப்பாக இது வந்துள்ளது என்றது வங்கி.

ஒன்றாக நாம் குணமடைவோம், மீண்டும் கட்டியெழுப்புவோம், எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக வெளிப்படுவோம் என்றார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் சந்திரா.

தாராலி மற்றும் ஹர்சிலில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மக்களுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ளது பாங்க் ஆஃப் பரோடா.

இதையும் படிக்க: தில்லி-வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com