முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,974 கோடியாக உயர்வு!

வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் அதன் ஒருங்கிணைந்த லாபம் ஆண்டுக்கு ஆண்டு 65% உயர்ந்து ரூ.1,974 கோடியாக உள்ளது என்று அறிவித்துள்ளது.
muthoot
muthoot
Published on
Updated on
1 min read

புதுதில்லி: தங்கக் கடன் வழங்குநரான வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் அதன் ஒருங்கிணைந்த லாபம் ஆண்டுக்கு ஆண்டு 65 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,974 கோடியாக உள்ளது என்று அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.1,196 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

2025 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ரூ.4,492 கோடியாக இருந்த மொத்த வருமானம், மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் 44 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,485 கோடியாக உள்ளது என்றது.

2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கடன் சொத்துக்கள் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.98,048 கோடியிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு 37 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,33,938 கோடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: உலகளாவிய சாதகமான குறிப்புகளுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

Summary

Gold loan NBFC Muthoot Finance reported a 65 per cent year-on-year surge in its consolidated profit after tax to Rs 1,974 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com