
கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் & இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு 50.5 சதவிகிதம் சரிந்து ரூ.29 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 16.3 சதவிகிதம் குறைந்து ரூ.911 கோடியாக உள்ள நிலையில், இது முந்தைய ஆண்டு அதே காலத்தில் ரூ.1,088 கோடியாக இருந்தது.
வட்டிக்கு முந்தைய வருவாய், வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கம் ஆகியவை 36 சதவிகிதம் குறைந்து ரூ.123 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் லாப வரம்பு 267 புள்ளிகள் குறைந்து 8.7% இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஒரு பங்கின் வருவாய் ரூ.1.50ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.0.75 ஆகக் குறைந்துள்ளது. வரிக்குப் பிந்தைய லாபம் வரம்பு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 5.4 சதவிகிதத்திலிருந்து 3.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
இந்திய ரயில்வேக்கு குறைவான வேகன் வழங்கப்பட்டதே, காலாண்டு வருவாய் சரிவுக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது நிறுவனம். இந்த நிலையில் விநியோகம் தற்போது மேம்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான இந்திரஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பானது ஆய்வை நிறுத்தி வைத்ததால், டெக்ஸ்மாக்கோ வெஸ்ட் ரெயிலில் வருவாய் தற்காலிகமாக சரிந்ததாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: எம் & எம் வாகனங்களின் விற்பனை 26% உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.