புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு.

News image

PTI Graphics

Updated On :19 ஆகஸ்ட் 2025, 12:58 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் கூடுதல் வரிகள் குறித்த கவலைகள் தளர்த்தப்பட்டதால், ரூபாய் நேர்மறையாக வர்த்தகம் ஆவதாக எதிர்பார்க்கப்படுவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.24 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.31 முதல் அதிகபட்சமாக ரூ.86.92 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99ஆக நிறைவடைந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ.87.39 ஆக நிறைவடைந்தது.

Summary

The rupee appreciated 40 paise to close at 86.99 against the US dollar on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.