
புதுதில்லி: மாற்று தேவையின் பின்னணியில், உள்நாட்டில் டயர் துறையில், நடப்பு நிதியாண்டில் 7 முதல் 8 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று தெரியவந்துள்ளது.
ஜே.கே. டயர் & இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அன்ஷுமான் சிங்கானியா கூறுகையில், இந்திய டயர் தொழில், ஏற்றுமதி சார்ந்த அதிக உற்பத்தித் துறையாகவே உள்ளது. அதே வேளையில் 2025ல் ஏற்றுமதி ரூ.25,000 கோடியைத் தாண்டியுள்ளது.
நிதியாண்டு 2026ல் விற்பனை குறைவாக இருந்தபோதிலும், வலுவான உள்நாட்டு மாற்றுத் தேவையின் பின்னணியில் இந்திய டயர் துறை 7 முதல் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும்.
நிறுவனமானது, அதன் திறன் விரிவாக்கம், முதலீடுகள், உற்பத்தி செயல்திறனில் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
வரவிருக்கும் பண்டிகை காலம், சமீபத்திய ரெப்போ விகிதக் குறைப்புகளின் நன்மைகள் மற்றும் சாதகமான பருவமழை மற்றும் நுகர்வோர் உணர்வுகள் மேலும் மேம்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நிதியாண்டின் இரண்டாம் பாதியில் தேவை அதிகரிக்கும் என்றும், பருவமழைக்குப் பிறகு உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கப் பிரிவுகளில் மீட்சி ஏற்படும் என்றார் அப்பல்லோ டயர்ஸ் தலைமை நிதி அதிகாரி கௌரவ் குமார்.
மூலப்பொருட்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, தற்போதைய நிலைகளுடன் ஒப்பிடும்போது, இரண்டாம் காலாண்டில் மூலப்பொருட்களின் விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் இணைக் குழுத் தலைவருமான ஸ்ரீகுமார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், வணிக மற்றும் பயணிகள் வாகனப் பிரிவுகளின் வளர்ச்சி சற்று பின்தங்க வாய்ப்புள்ளது என்றார்.
இதையும் படிக்க: சுஸுகி 2 சக்கர வாகன விற்பனை சரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.