ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...
Stock market
கோப்புப்படம்IANS
Published on
Updated on
1 min read

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 25) காலை 81,501.06 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 287.46 புள்ளிகள் அதிகரித்து 81,593.26 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86.60 புள்ளிகள் உயர்ந்து 24,956.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் முதல் 4 நாள்கள் பங்குச்சந்தை ஏற்றமடைந்த நிலையில் வார இறுதி நாளில் கடும் சரிவைச் சந்தித்தது. தொடர்ந்து இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிஃப்டி ஐடி பங்குகள் நல்ல லாபம் பெற்றுள்ளன. மெட்டல் உள்ளிட்ட மற்ற துறைகள் ஓரளவு லாபத்தைப் பதிவு செய்து வருகின்றன.

நிஃப்டி பங்குகளில் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிண்டால்கோ மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

அதே நேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, அப்போலோ மருத்துவமனை, ஜியோ ஃபைனான்சியல் மற்றும் மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

Summary

Stock Market Updates: Sensex gains 300 pts, Nifty near 25,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com