
ஆப்பிள் நிறுவனம், அதன் அடுத்த தலைமுறை ஐஃபோன் 17-ஐ செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய தலைமுறை ஐஃபோனை அறிமுகம் செய்வது மட்டும் இந்த செப்டம்பர் மாத சிறப்பு அல்ல, ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐஃபோன்களின் விலை தாறுமாறாகக் குறைந்து, ஐஃபோன் வாங்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கும் இளசுகளுக்கும் பொற்காலம் என்றே சொல்லலாம்.
புதிய ஐஃபோன் 17 மாடல் விற்பனைக்கு வந்துவிட்டால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஐஃபோன் 16 மற்றும் ஐஃபோன் 15 மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் ரூ.10 ஆயிரம் அளவுக்குக் குறைத்துவிடும்.
கடந்த ஆண்டும், ஆப்பிள் நிறுவனம் இதே வழிமுறையைத்தான் கையாண்டது. இதன் மூலம் பழைய மாடல் ஐஃபோன்களையும் முழுமையாக விற்று முடிக்கவும், ஐஃபோன் வாங்குவது என்று காத்திருப்பவர்களுக்கு விலை குறையும்போது ஜாக்பாட்டாக இருப்பதால் அதிகமானோர் ஐஃபோன்களை வாங்குவதும் ஒரு வணிக உக்தியாக உள்ளது.
இப்போது இன்னும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், ஐஃபோன் 17 அறிமுகமாகவிருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஐஃபோன் 14 மற்றும் ஐஃபோன் 13 போன்றவற்றின் விலைகள் வரும் காரங்களில் அதிகம் குறையலாம்.
தற்போது ஐஃபோன் 16 மாடல் ரூ.79,900க்கும், ஐஃபோன்16 பிளஸ் மாடல் ரூ.89,900க்கும் விற்கப்படுகிறது. இதுவே, ஐஃபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் இரண்டும் தலா ரூ.1,19,900 மற்றும் ரூ.1,44,900 என்ற அளவில் விற்பனையில் உள்ளது. ஃபோன் 17 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐஃபோன் 16இ, ஐஃபோன் 16, ஐஃபோன் 16 பிளஸ் போன்றவை விற்பனையில் தொடரும்.
ஆனால், முற்றிலும் மற்ற போன்கள் விற்பனை நின்றுவிடாது, மூன்றாம் தரப்பு இணையதளங்கள வாயிலாக அதாவது ஃபிளிப்கார்ட், அமேசான் போன்றவற்றில் செல்ஃபோன் இருப்பு இருக்கும் வரை விற்பனை நடைபெறும். அதேவேளையில், சில வங்கிகளின் கிரெடிட் கார்டு, போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் விலைச் சலுகைகளுடன் ஐஃபோன்கள் விற்கப்படும்.
ஐஃபோன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களாக இருந்தால், இன்னும் ஒரு சில வாரங்கள் காத்திருக்கலாம். ஐஃபோன் 17 அறிமுகமாகிவிட்டால், நீங்கள் ஏற்கனவே பாத்திருக்கும் ஐஃபோன் விலைகள் கணிசமாகக் குறையலாம். வாய்ப்பைத் தவற விட வேண்டாம் என்கிறது சந்தை நிலவரம்.
இதையும் படிக்க... இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.