

புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட் அதன் மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 22% வளர்ச்சியடைந்து நவம்பர் மாதத்தில் 1,00,670 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் நிறுவனம் 82,257 வாகனத்தை விற்பனை செய்துள்ளதாக ராயல் என்ஃபீல்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விற்பனையில் கடந்த ஆண்டு நவம்பரில் 72,236 வாகனங்களிலிருந்து 25% அதிகரித்து 90,405 வாகனங்களாக உள்ளதாக தெரிவித்தது.
ஏற்றுமதி பொறுத்த வரையில் 2% உயர்ந்து 10,265 வாகனங்களாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 10,021 ஆக இருந்தது என்றது நிறுவனம்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.53 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.