

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான வலுவான தேவை காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.53 ஆக நிறைவடைந்தது.
ரூபாயின் நீடித்த பலவீனத்திற்கு, தாமதமான இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வரையறுக்கப்பட்ட மத்திய வங்கி தலையீடு ஆகியவையே காரணம் என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.45 ஆக வர்த்தகமானது. பிறகு இன்ட்ராடே வர்த்தகத்தில் டாலருக்கு நிகராக ரூ.89.79 என்ற சாதனை அளவுக்கு சரிந்து முடிவில் 34 காசுகள் குறைந்து முடிவடைந்தது.
நவம்பர் 21 அன்று அமெரிக்க டாலருக்கு நிகராக அதன் வாழ்நாள் குறைந்த பட்ச மதிப்பான ரூ.89.66 ஆக இருந்தது. அப்போது ரூபாயின் மதிப்பு 98 காசுகள் சரிந்தததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உச்சத்தை எட்டிய பிறகு சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.