

மும்பை: முதலீட்டாளர்கள், அதிக அளவில் லாபம் ஈட்டியதை தொடர்ந்து, அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இன்று புதிய அனைத்து நேர உச்சத்தை எட்டிய நிலையில், பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் 452.35 புள்ளிகள் உயர்ந்து 86,159.02 இன்ட்ரா-டே அதிகபட்சத்தை எட்டியது. பிறகு 122.85 புள்ளிகள் உயர்ந்து 26,325.80 என்ற வாழ்நாளின் உச்சத்தை எட்டியது.
வர்த்தக முடிவில், 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 64.77 புள்ளிகள் குறைந்து 85,641.90 ஆகவும், 50-பங்கு கொண்ட நிஃப்டி 27.20 புள்ளிகள் சரிந்து 26,175.75 ஆக நிலைபெற்றது.
எதிர்பார்த்ததை விட சிறந்த இரண்டாம் காலாண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து, இந்த வாரம் ஆர்பிஐ வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்பும் தொடர்ந்து மங்கிவிட்டதால், சந்தைகள் அதிக அளவில் சரிவை சந்தித்தன.
ஜூலை முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக 8.2% வளர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்களின் மனநிலை வெகுவாக உயர்ந்தது.
சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா, டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை சரிந்தும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், மாருதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் ஹச்சிஎல் டெக் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
ஆசிய சந்தைகளில், ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு உயர்ந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் இன்று சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நவம்பர் 28 தேதியன்று உயர்வுடன் முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.3,795.72 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,148.48 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.96% உயர்ந்து 63.60 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: சிபிஐசி தலைவராக விவேக் சதுர்வேதி நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.