

புதுதில்லி: பயணிகள் வாகனங்களின் விற்பனை 26% உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியதையடுத்து, நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் இன்று அதன் பங்குகள் 1.93% உயர்ந்து ரூ.363.75 ஆக இருந்தது. பகலில், இது 2.28% உயர்ந்து ரூ.365 ஆக இருந்தது.
என்எஸ்இ-யில் அதன் பங்கு 1.96% உயர்ந்து ரூ.363.80 ஆக இருந்தது.
நிறுவனத்தின் 24.59 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யில் வர்த்தகமான நிலையில், 127.14 லட்சம் பங்குகள் என்எஸ்இ-யில் வர்த்தகமானது.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விற்பனை நவம்பரில் ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்து 59,199 வாகனங்களாக உள்ளதாக தெரிவித்தது.
அதே வேளையில், கடந்த ஆண்டு நவம்பரில் 47,117 வாகனங்களை டீலர்களுக்கு அனுப்பியதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது.
உள்நாட்டு சந்தையில், நிறுவனத்தின் விற்பனை 47,063 வாகனத்திலிருந்து 22% அதிகரித்து 57,436 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
இதையும் படிக்க: ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% அதிகரிப்பு!
Shares of Tata Motors Passenger Vehicles ended nearly 2 per cent higher after the firm said its sales rose 26 per cent in November.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.