ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை

Updated On :4 டிசம்பர் 2025, 11:31 am IST

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சரிவில் தொடங்கிய நிலையில் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,987.56 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 251.00 புள்ளிகள் அதிகரித்து 85,357.81 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77.85 புள்ளிகள் உயர்ந்து 26,063.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த 4 நாள்கள் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸில் டிசிஎஸ் , ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், எடர்னல், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், டிரென்ட், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ் பிவி, என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்து வருகின்றன.

துறைகளில் நிஃப்டி ஐடி அதிகபட்சமாக 1.5% வரை உயர்ந்தன.

ஆசிய பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தமாகி வருகின்றன. அமெரிக்க பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிந்துள்ளன.

Summary

Sensex gains 300 pts from day's low, Nifty near 26,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.